Tamil poem with their meaning | purananuru | Vallal pegan| வள்ளல் பேகன்
புறநானூறு
பாடல்:
அறுகுளத் துகுத்து மகல்வயற் பொழிந்தும்
உறுமிடத் துதவா துவர்நில மூட்டியும்
வரையா மரபின் மாரி போலக்
கடாஅ யானை கழற்கால் பேகன்
கொடைமடம் படுத லல்லது
படைமடம் படான் பிறர் படைமயக் குறினே
பாடல் பொருள்:
மழை எங்கு பெய்ய வேண்டும் எப்படி பெய்ய வேண்டும் என்று அளவு இல்லாமல் பெய்யும் தன்மை உடையது. அது நீர் நிரம்பியுள்ள குளங்களிலும் வயல் நிலங்களிலும் பெய்யும்.
அவ்விடங்களில் மட்டுமல்லாமல் யாருக்கும் பயன்படாத களர் நிலத்திலும் பெய்யும்.
அதுபோல வள்ளல் பேகணும் தன்னிடம் வரும் இரவலர் பொருள் உள்ளவரா இல்லாதவரா என்று பாராமல் வாரி வாரி வழங்கும் வள்ளல் குணம் படைத்தவன் ஆவான்.
ஆனால் பிறர் படைகொண்டு வந்து போரிட்டால் அப்படையினிடம் போர் நெறிக்கு மாறாய்ச் செயல்படாமல் போர் புரிவான்.

Comments
Post a Comment