Seevaga sinthamani paadal

    சீவக சிந்தாமணி பாடல்

கருங்கொடிப் புருவம் ஏறா
கயநெடுங் கண்ணும் ஆடா
அருங்கடி மிடறும் விம்மா
தணிமணி யெயிறுந் தோன்றா
இருங்கடற் பவளச் செவ்வாய்
திறந்திவள் பாடி னாளோ
நரம்பொடு வீணை நாவின்
நடந்ததோ வென்று நைந்தார்


பாடலின் பொருள்:
கரிய நீண்ட புருவம் நெற்றியில் ஏறாது, கயல்மீனை போன்ற பெரிய கண்ணும் ஆடாது,
அழகுடன் விளங்கும் தொண்டையும் விம்மாது,
முத்து போன்ற அழகிய பற்களும் வெளியே தெரியாது ,
தத்தை கடலில் பிறந்த பவளம் போன்ற தன் செவ்வாயை திறந்து தான் பாடினாளோ அல்லது
நரம்பொடு கூடிய யாழ் தான் நாவினை பெற்று பாடியதோ என்று வியந்தனர்.

Comments